Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2021 07:52:15 Hours

முல்லைத்தீவு தளபதி கட்டளை அலகுகளுக்கு பரீட்சார்த்த விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க 2021 நவம்பர் 11 ஆம் திகதி அன்று விசுவமடுவிலுள்ள 572 வது பிரிகேட், 6 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி உள்ளிட்ட கட்டளை அலகுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது பிரிகேடியர் நிஷாந்த முத்துமால அவர்களின் கட்டளையின் கீழுள்ள பகுதிகள் மற்றும் அவற்றின் பணிகள் தொடர்பாகவும் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத் தொடர்ந்து, 6 ஆவது இலங்கை சிங்கப் படைப்யணி மற்றும் 14 ஆவது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி மற்றும் 572 வது பிரிகேடின் முக்கிய பகுதிகளான தெருவில் மற்றும் விசுவமடு குளம் அமைந்துள்ள பகுதிகளுக்கும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவ் விஜயத்தின் போது 57 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட பணியாளர்களும் கலந்துகொண்டனர்.