Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2021 08:52:15 Hours

வன்னி பாதுகாப்பு தலைமையக தளபதி மற்றும் மாவட்ட செயலாளரால் வௌ்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் வவுனியா மாவட்டச் செயலாளர் சரத்சந்திர ஆகியோர் புதன்கிழமை (10) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிநிதிகளுடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாதகமான வானிலை மாற்றங்களின் போதான நிலைமைகளை கையாளுவதற்கான திட்டமிடல்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிதலின் போது ஏற்படக்கூடிய மண்சரிவு அனர்த்தங்கள் மற்றும் மண்சரிவுகளை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுதல், தங்குமிடம் மற்றும் உணவு வழங்குதல், சுகாதார வசதிகளை வழங்குதல் மற்றும் சேதங்களை மறுசீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார சேவை அதிகாரிகள், விவசாய அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.