Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2021 09:52:15 Hours

மத்திய தளபதியிடமிருந்து அனாதை இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தளபதி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களினால் புதன்கிழமை (10) படையினருடன் இணைந்து பண்டாரவளையில் உள்ள சிறி சங்கபோ சிறுவர் இல்லத்தில் உள்ள அனாதை சிறார்களுக்கு உணவு பரிமாறுவதற்கான பொருட்களை பெற்றுக் கொடுத்திருந்ததோடு, அவர்களுக்கான தின்பண்டங்களையும் பரிமாறினார்.

அதேநேரம் சிறுவர்களுக்கு வழமைக்கு மாறாக சுவையான உணவு வேளையொன்றை வழங்குவதற்காக பீட்சா துண்டுகள் வழங்கி வைக்கப்பட்டன. மத்திய பாதுகாப்புப் படைத் தளபதியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கட்டிட நிர்மாண செயற்பாடுகள் தொடர்பிலான செயபாடுகள் குறித்தும் மீளாய்வு செய்தார். அத்தோடு பிரிகேடியர் பொதுப்பணி, பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் ஆகியோரும் மேற்படி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.