Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2021 10:52:15 Hours

யாழ் இலங்கை இராணுவச் சேவை படையினரால் காங்கேசன்துறையின் கட்டின பிங்கம நிகழ்வுகளுக்கு உதவி

காங்கேசன்துறை வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜ மஹா விகாரையின் பாரம்பரிய 'கட்டின' பூஜை சனிக்கிழமை (13) மகா சங்கத்தினரின் பங்களிப்புடன் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு மற்றும் பக்தர்கள், சிப்பாய்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்புப் பகுதிகளின் தளபதி மேஜர் ஜெனரல் வந்தித மகிந்த அவர்களின் வழிகாட்டலின் கீழ் 5 ஆவது இலங்கை இராணுவ சேவைப் படையின் சிப்பாய்களால் இந்நிகழ்வுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. இதன்போது கட்டின சீவரய ஊர்வலமாக எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து நிகழ்வுகள் நிறைவடைந்தன.

மேற்படி நிகழ்வுகள் அமரபுர ஸ்ரீ கல்யாணவங்ச மகா பீடத்தின் போதகர் வண. அம்பலாங்கொட வஜீர்ஞான தேரரின் கட்டினான்சிச சொற்பொழிவு மற்றும் பிக்குகளுக்கு அன்னதானம் மற்றும் 'ஆட்டபிரிகார' வழங்கும் சமய நிகழ்ச்சி ஆகியவற்றோடு நிறைவுக்கு வந்தது.