Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2021 11:52:15 Hours

கொழும்பு சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தலைவர் வன்னி தளபதியுடன் சந்திப்பு

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கொழும்பு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கான தலைவி திருமதி தாரா பியோடோரா மெண்ட்கொமெரி அவர்களுக்கு வெள்ளிக்கிழமை (12) வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அவர் வவுனியாவிற்கான சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் திரு இக்னாசியோ அவர்களுடன் சென்றிருந்ததோடு, தலைமையகத்திற்கு வருகை தந்த அவர்களுக்கு வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணவக அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடைபெற்ற மேற்படி சந்திப்பின் போது குடாநாட்டில் உள்ள சிப்பாய்களின் வகிபாகம் மற்றும் பணிகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் மற்றும் வன்னிப் பகுதியின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதோடு, நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

சந்திப்பின் நிறைவில் தாரா பியோடோரா மெண்ட்கொமெரி அவர்களால் விருந்தினர் பதிவேட்டில் எண்ணப் பகிர்வுகள் பதிவிடப்பட்டன.