Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2021 12:25:12 Hours

தென் சூடானிலுள்ள சிறிமெட் நிலை-2 வைத்தியசாலையின் முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு பாராட்டு

ஐ.நா தூதரகத்தின் களத் தலைமையகத்தினால் வைத்தியசாலைகள் தொடர்பில் வியாழக்கிழமை (04) மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் போது, தென் சூடானில் உள்ள 7 வது இலங்கைக் குழுவால் நிர்வகிக்கப்படும் சிறிமெட் நிலை-2 வைத்தியசாலையின் முகாமைத்துச் செயப்பாடுகள் பாராட்டப்பட்டன.

கிழக்கு பகுதி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகளால் மேற்படி மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதோடு, துணைப் படைகளின் தளபதி லெப்டினன் கேணல் வைத்தியர் பதேமா ஜீன் கான் அவர்களின் தலைமையிலான குழுவினாலேயே மேற்படி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேற்படி நிகழ்வுகளின் போது இலங்கை படைகளின் தளபதி கேணல் டி.ஆர்.எஸ்.ஏ.ஜெயமான்ன அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டிருந்ததோடு, தென் சூடானிலுள்ள போர் இன் பணிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. அதனையடுத்து, தலைமை வழங்கல் அதிகாரி மேஜர் டீஎச்பி கஹவத்தவினால் பணிகள் தொடர்பில் மேலதிக விளக்கங்கள் வழங்கப்பட்டன.

வைத்தியசாலை தளபதி மற்றும் வழங்கல் அதிகாரி, கிழக்கு பகுதிக்கான தளபதிகளின் ஆலோசனைகளுக்கமைய வைத்திய வசதிகள், தயாரிப்புகள், வைத்திய பராமரிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளில் செயற்திறன் மிக்கதாக விளங்கும் குறித்த வைத்தியசாலையில் 60 நாட்களில் 40 வெளி வெளிநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதோடு கடந்த ஏழு நாட்களில் 20 புதிய நோயாளிகள் இந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு கொவிட் - 19 பரவல் தடுப்புச் செயற்பாடுகளில் சிறந்த சேவையை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐநா நோயாளி பராமரிப்பு தரக் பரிந்துரைகளுக்கமைய சுகாதாரத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த அனைத்து மருத்துவமனை ஊழியர்களின் அறிவாற்றல் தொடர்பிலும் மேற்படி குழுவினால் ஆராயப்பட்டிருந்ததோடு, சிறிமெட் நிலை II வைத்தியசாலையின் பொது விபத்துக்களின் போதான நிலைமைகளை முகாமைத்துவம் செய்துகொள்ளல் தொடர்பிலான அறிவுறுத்தல்களும் துணைப்படை தளபதியவர்களினால் மதிப்பீடு செய்யப்பட்டது.