14th November 2021 15:43:54 Hours
கொத்மலை ஓயாவை அண்மித்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் ஆற்றின் நீர்மட்டம் திடீரென அதிகரித்தமையால் அடித்துச் செல்லப்பட்ட நபரொருவர் 581 வது பிரிகேடின் 5 வது விஜயபாகு காலாட் படை சிப்பாய்களால் இன்று (14) நண்பகல் 12.00 மணியளவில் சிரமங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டார்.
5 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலுக்கிணங்க, நைலோன் கயிறுகளை பயன்படுத்தி விரைவாக நீரில் குதித்த படையினர் நீர்ச்சுழியில் சிக்கித் தவித்த மீனவரை கரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். (வீடியோ காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன)