12th November 2021 15:27:21 Hours
தொடர்ச்சியாக பதிவாகும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிகழும் புவிவியல் மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கும் பணிகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் , பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்து வரும் படையினர் பஹல கடுகன்னாவ பகுதியின் விதியோரங்களில் காணப்படும் சிறிய கடைகளை அகற்றும் பணிகளை வியாழ்க்கிழமை (11) காலை வேளையில் முன்னெடுத்தனர்.
அதன்படி 8 வது சிங்கப்படையின் கெப்டன் ஒருவர் மற்றும் படையினரின் உதவியுடன் கயிற்றை பயன்படுத்தி கீழிறங்கியிருந்த பாறைக்கு கீழ் பகுதியிலிருந்து அங்கு காணப்பட்ட நீர்வழிகள் மற்றும் நிபுணர்களின் ஆய்வுகளுக்கு அவசியமான மாதிரிகளை அவதானித்திருந்ததோடு, அவை தொடர்பிலான புகைப்படங்களையும் எடுத்திருந்தனர். அதனையடுத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி வியாபாரிகளின் உதவியுடன் பிரதான விதியை அண்மித்து காணப்பட்ட சிறிய கடைகளை அகற்றும் பணிகளை ஆரம்பித்தனர்.
அதேபோல், 61 வது படைப்பிரிவு தளபதி அவர்கள் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட படையினர்களுக்கு ஊக்குவிப்புக்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வியாழக்கிழமை (11) காலை 10.30 மணியளவில் 14 வது படைப்பிரிவின் கீழுள்ள 141 வது பிரிகேடின் சிப்பாய்கள் கம்பஹா அகரவிட்ட கிராம பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த பகுதிக்கு விரைந்து அங்கு வீதியோரப் பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ள நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் மரப் பலகைகள் மற்றும் இரும்பு குழாய்களை பயன்படுத்தி தற்காலிக பயன்பாட்டிற்கான பாலமொன்றை கட்டமைத்தனர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 612 வது பிரிகேடின் முதலாவது இலங்கை முன்னோடிப் படையின் படையினர் 2021 நவம்பர் 07 அன்று மத்துகமவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவியதோடு அப்பகுதியிலுள்ள அதிகாரிகளின் பணிகளுக்கு அவசியமான உதவிகளையும் வழங்கினர்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 611 வது பிரிகேடின் 8 வது இலங்கை சிங்கப் படையணி சிப்பாய்களால், ஹத்தகொட - கலிகமுவ பகுதியில் வியாழக்கிழமை (11) பதிவாகிய அதிக மழைவீழ்ச்சி காரணமாக வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது, மண்மேடுக்குள் புதையுண்டிருந்த இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன.
அதேநேரம், வியாழக்கிழமை (11) 58 வது படைப்பிரிவு முதலாம் படையின் சிப்பாய்களால் தலுவ பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 150 க்கும் மேற்பட்ட சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 58 வது படைப்பிரிவின் தளபதி, மற்றும் கட்டளை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.