14th November 2021 18:43:54 Hours
தேசிய பாதுகாப்பு விடயங்கள் மற்றும் அரச ஆட்சிமுறைகள் தொடர்பான மூலோபாய தீர்மானங்களை உயர்த்தும் நிமித்தம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் இன்று (11) காலை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் அங்கீகாரம் பெற்ற கொழும்பு 03 இல் உள்ள புதிய தேசிய பாதுகாப்பு கல்லூரியினை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் அழைப்பின் பேரில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன (ஓய்வு) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர(ஓய்வு) ஆகியோரின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதியவர்கள் கலந்து கொண்டார்.
பிரதம அதிதியின் வருகையுடன் நிகழ்வு ஆரம்பமானதை தொடர்ந்து, அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வரவேற்கப்பட்டார் மற்றும் அழைக்கப்பட்ட இராஜதந்திரிகள், ஜனாதிபதி செயலாளர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் மற்றும் இராணுவ தளபதி, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் துணை வேந்தர் மற்றும் புதிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி ஆகியோருடன் புதிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதான கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதான கட்டிடத்தை திறந்து வைத்த முப்படைகளின் தளபதியும் மற்றும் பாதுகாப்பு அமைச்சருமான அதிமேதகு ஜனாதிபதியவர்கள் பிரதான கட்டிடத்தில் உள்ள உள்துறை கல்வி வசதிகளை பார்வையிட அழைக்கப்பட்டதுடன் சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது.
இப் புதிய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் தேசிய பாதுகாப்பு, அரசு மற்றும் அறிவுசார் திறன் ஆகியவற்றின் எல்லைகளை விரிவுபடுத்தும் இராணுவத்தினர், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கான மூலோபாய கல்வி வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான இதன் பின்னணியில் உள்ள தொடர்கதையை விரிவுபடுத்தும் வகையிலான இப் புதிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பங்கு மற்றும் பணிகளுடன் அதன் முதுகலை பட்டப்படிப்புகள் தொடர்பாகவும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் வரவேற்பு உரையும் வழங்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர (ஓய்வு) தனது வரவேற்புக் குறிப்பில், சிவில்-இராணுவ ஒத்துழைப்புக்கானதும் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகள் அதே நேரத்தில் வெளிநாட்டு நாடுகளின் படையினருக்காக பட்டப் படிப்புகள் நடத்தப்படும் இந்த புதிய தளம் எவ்வாறு உருவானது என்பதையும் தேசிய பாதுகாப்பிற்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அதிகாரிகளையும் விமர்சன மற்றும் மூலோபாய பகுப்பாய்வுக்காக ஒரே கூரையின் கீழ் எவ்வாறு கொண்டு வரப்படும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் இணையத்தளத்தின் உத்தியோகபூர்வ அறிமுகம், அதன் ஆரம்ப விழாவிற்கு அன்றைய பிரதம அதிதியை அழைத்ததுடன், அவர் இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தினார். பிரதம அதிதியின் உரையின் பின்னர், தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர (ஓய்வு) புதிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் கட்டிடத்தின் உருவப்படத்தை அன்றைய பிரதம அதிதிக்கு நினைவுச் சின்னமாக வழங்கினார்.
இந் நிகழ்வின் முடிவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் விருந்தினர் புத்தகத்தில் பிரதம அதிதி நன்றி மற்றும் பாராட்டுக்களை பதிவு செய்தார்.
இலங்கையில் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ஆரம்பம் பாதுகாப்பு ஆய்வுகளின் வரலாற்றில் ஒரு மைல்கலை பூரணப்படுத்துவதுடன் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய முடிவெடுக்கும் செயல்முறைகள் ஆகிய இரண்டிற்கும் மூலோபாய தலைவர்களை சீர்படுத்துவதில் நீண்டகால இடைவெளியை நிரப்புகிறது. நமது சொந்த தேசிய பாதுகாப்பு கல்லூரியில் இல்லாத நிலையில், பாதுகாப்பு மற்றும் பொதுத்துறை வெளிநாட்டு பாதுகாப்புக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, சர்வதேச தரத்திலான ஞானம் - செழிப்பு - நெகிழ்ச்சி' ஆகிய மகுடவாசகத்திற்கு இணையாக நமது இப்போது முழு அளவிலான பட்டம் வழங்கும் நிறுவனமாக இது திகழ்கிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர்கள், பாகிஸ்தானின் பதில் உயர் ஸ்தானிகர், சீன மக்கள் குடியரசின் தூதுவர், பல தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழுவும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பிபி ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் திரு லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே (ஓய்வு), பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கே.ஜே.அல்விஸ் (ஓய்வு), பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் துணை வேந்தர் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.