Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 21:40:22 Hours

கல்பிட்டியில் பொறிமுறை காலாட் படையணி படையினரின் 30 மிமீ பீரங்கி துப்பாக்கி சூடு ஒத்திகை

பொறிமுறை காலாட்படையணியின் படையினர் 2021 ஒக்டோபர் 27 முதல் 28 வரை கல்பிட்டி விமானப்படை கள துப்பாக்கிச் சூடு பகுதியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் களத் துப்பாக்கிச் சூடு பயிச்சிகளை நடத்தினர்.

பொறிமுறை காலாட்படையணியின் படையினருக்கு பொருத்தமான கள துப்பாக்கிச் சூடு வீச்சு கிடைக்காததால், 30 மிமீ பீரங்கிகளுடன் துப்பாக்கிச் சூடு பயிற்சியைத் முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளை இழந்தனர், ஏனெனில் அந்த இலக்குகள் துப்பாக்கிச் சூடும் இடத்தில் இருந்து 13 கிமீ க்கு மேல் அதிகமாகப் பயணிக்கக் கூடியவை என்பதால்.

பொறிமுறை காலாட்படையணியின் படையினருக்கு துப்பாக்கிச் சூடு பயிற்சி 3 தொடர்ச்சியான கட்டங்களின் கீழ் திட்டமிடப்பட்டதுடன் மற்றும் முதல் துப்பாக்கிச் சூடு அமர்வு கல்பிட்டி விமானப்படை கள துப்பாக்கிச் சூடு தளத்தில் 15 அதிகாரிகள் மற்றும் 55 சிப்பாய்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

பொறிமுறை காலாட்படையணி பயிற்சி நிலைய தளபதி கேணல் கோஷின பீரிஸின் மேற்பார்வையின் கீழ் பொறிமுறை காலாட்படையணி பயிற்சி நிலையத்தின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் எமில்சன் ஹப்புகொடுவ மற்றும் தகுதி வாய்ந்த பயிற்றுவிப்பு குழுவினரால் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும் பொறிமுறை காலாட்படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பால்சூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப் பயிற்சி நிகழ்வு இடம்பெற்றது.

இலங்கை இராணுவ பொது பதவி நிலை பணிப்பாளர் நாயகமும் பொறிமுறை காலாட்படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ அவர்கள் இப் பயிற்ச்சி விரிவுரைகளுக்கு தேவையான அனைத்து யுத்த வாகனங்கள் மற்றும் கவச வாகன வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.