Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2021 15:54:13 Hours

1 வது கெமுனு ஹேவா படையினரால் உடவலவை தேசிய பூங்காவில் கட்டி வைக்கப்பட்டிருந்த குட்டி யானை மீட்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 58 வது படைப் பிரிவின் கீழுள்ள 581 வது பிரிகேடின் 1 வது கெமுனு ஹேவா படையணியினர் புதன்கிழமை (10) மாலை உடவலவை தேசிய பூங்காவிற்குள் முன்னெடுத்திருந்த ரோந்து நடவடிக்கைகளின் போது, அங்குள்ள தென்னை மரங்களுக்கிடையில் கயிறுகளை கொண்டு கட்டி வைக்கப்பட்டிருந்த 8 வருடங்கள் நிரம்பிய யானைக் குட்டியை மீட்டுள்ளனர்.

கட்டி வைக்கப்பட்டிருந்த குட்டி யானையைக் கண்டறிந்த படையினர், உடவலவை தேசிய பூங்காவில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகளை அறிவுறுத்தியிருந்தோடு, குட்டி யானையை மீட்கும் பணிகளுக்காக அவர்களை அழைப்பித்தனர்.

இந் நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய தகவலுக்கு அமைய உடவலவயில் உள்ள ‘எத் அத்துரு செவன’ (யானை பராமரிப்பு இல்லம்) த்திலிருந்து உடவலவை தேசிய பூங்காவிற்கு குட்டி யானை சற்று முன்னர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

58 வது படைப்பிரிவின் தளபதி, 581 வது பிரிகேடின் தளபதி, 1 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் ரோந்து பணிகளில் ஈடுபட்ட படையினரோடு நிலையான தொடர்புகளை பேணினர்.

581வது படைப்பிரிவு சிப்பாய்கள், உடவலவை தேசிய பூங்கா மற்றும் லுணுகம் வெஹெர தேசிய பூங்காவிற்குள் சட்டவிரோத வேட்டைக்காரர்கள் மற்றும் ஏனைய சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை மடக்கிப் பிடிக்கப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.