Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2021 12:00:25 Hours

15 வது பொறியியல் சேவை படையணியின் சிப்பாய்களால் சோமவதியவில் புதிய பிரசங்க மண்டபம் நிர்மாணம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 15 வது பொறியியல் சேவை படையணியின் படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் “பிபிதெமு பொலன்னறுவ” திட்டத்தின் கீழ் பொலன்னறுவை புராதன சோமவதிய ரஜமாஹா விகாரை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி “தர்மசாலாவ” கட்டிடம், சோமாவதி ரஜமஹா விகாரையின் தலைமை தேரரும் மல்வத்தை பீடத்தின் செயலாளருமான அதி வண. பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (7) ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய ஆகியோர் பல முக்கியஸ்தர்களுடன் இணைந்து பெயர் பலகையை திரைநீக்கம் செய்து புதிய மூன்று மாடி கட்டிடத்தை அடையாள நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

அதன்பிறகு, வளாகத்தில் சங்கவாசய (குடியிருப்பு அறை), மற்றும் அருங்காட்சியகம் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படுவதற்கு முன்பு 50 மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இந்த புதிய கட்டுமான பணிகள் 15 வது பொறியியல் சேவை படையணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சோமாவதிய ரஜமஹா விகாரையின் பிரதமகுருவின் வேண்டுகோளுக்கிணங்க, பிரசங்க மண்டபத்தை அமைப்பதற்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பை செய்தமைக்காக பாராட்டி, 15 வது பொறியியல் சேவை அனைத்துப் படையினருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கோவிட்-19 தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி மத சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.