Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2021 13:50:10 Hours

மேற்கு, யாழ்ப்பாணம், வன்னி தலைமையகங்களின் சிப்பாய்களால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நூற்றுக்கணக்கான சமைத்த உணவுப் பொதிகள் பகிர்ந்தளிப்பு

நாடு முழுவதிலும் கடந்த 24 மணித்தியாலங்களாக பதிவாகும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ள அபாய அதிகரிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, அவசரகால நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கான படையினரை எவ்வேளையிலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு பாதுகாப்பு படைத் தளபதிகளை அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (10) நண்பகலுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வௌ்ளப் பாதிப்புக்கள் காரணமாக திவுலபிட்டிய வெலிஹிந்த கிராம சேவகர் பிரிவின் டகடகல்ல பிரதேம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது.

14 வது படைப்பிரிவின் கீழுள்ள 143 பிரிகேடின் 14 சிப்பாய்கள் தங்களது கட்டளை அதிகாரியின் அறிவுரைக்கமைய பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உதவிகளை வழங்க விரைந்ததோடு, வௌ்ள பாதிப்புக்கு இலக்காகியிருந்து சமைப்பதற்கான வசதிகள் இன்றி தவித்த 35 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றினர்.

இராணுவ படகுகளின் உதவியுடன் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்த்த படையினர் அவர்களுக்கான சமைத்த இரவு மற்றும் மதிய உணவு பொதிகளையும் வழங்கினர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக மழைவீழ்ச்சியினால் நீர் மட்டம் உயர்வடைந்தமையினால் ஏற்பட்ட வௌ்ளம் காரமாண யாழ். குடாநாட்டின் சில பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியமையினால் அப்பகுதியிலுள்ள மக்கள் தங்களது உடமைகளை கைவிட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கிச் சென்றிருந்தனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 51,52,55 படைப்பிரிவு சிப்பாய்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்திருந்ததோடு, அங்கிருந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களையும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைத்த படையினர் அப்பகுதிகளில் நிரம்பியிருந்த நீர் வழிந்தோடுவதற்கான வழிகளை உருவாக்கினர், தடைப்பட்டிருந்த வீதிப் போக்குவரத்துச் செயற்பாடுகளையும் சீரமைப்பதற்கு பொலிஸாருக்கு உதவிகளை வழங்கினர்.

மேலும், அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு, குடிநீர் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை வழங்கியிருந்ததோடு, பொது மக்களின் கைவிடப்பட்ட சொத்துக்களை பாதுகாப்பதற்கான உதவிகளையும் படையினர் வழங்கினர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு, 51, 52 மற்றும் 55 படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் ஆகியோர் வௌ்ளத்தால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளை தனிப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினர். அதேபோல், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பாடல்களை பேணிவரும் படையினர் அனர்த்த நிலைமைகளை தனிப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதேநேரம், செவ்வாய்க்கிழமை (9) புத்தளதில் ஏற்பட்ட அதிக மழைவீழ்ச்சி காரமாண பாதிக்கப்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 300 மேற்பட்ட உணவுப் பொதிகளை படையினர் வழங்கினர்.

மேலும், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவின் கீழுள்ள 213 வது பிரிகேடின் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையின் சிப்பாய்களால், ஞாயிற்றுக்கிழமை (7) நபடகஸ்திகிலிய வான்கதவுகளிலிருந்து செல்லும் கால்வாய்கள் கழிவுகளால் நிரம்பியிருந்த நிலையில் அதனை முழுமையாக தூய்மையாக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மேலும் பிளவுகள் ஏற்படும் வகையில் காணப்பட்ட குளக்கரை பகுதிகளை சீரமைத்து தருமாறு படையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இது முன்னெடுக்கப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் 21 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க மற்றும் 213 ஆவது பிரிகேடின் தளபதி கேணல் எல்.ஜி.ஜே.என் ஆரியதிலக்க, 5 வது (தொ) இலங்கை காலாட்படையின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.டி ரத்னசிறி ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.