Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 21:45:22 Hours

முதலாவது படையணியின் தளபதி 53 வது படைப்பிரிவுக்கு விஜயம்

முதலாவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க முதலாவது படையணி நிறுவியதன் பின்னர் தனது முதல் விஜயத்தை 53 வது படைப்பிரிவுக்கு மேற்கொண்டார்.

53 வது படைப்பிரிவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது படையணியின் படை தளபதிக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மறியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் வருகை தந்த முதலாவது படையணியின் தளபதியை 53 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ வரவேற்றதுடன் பிரிகேட் தளபதிகள், படைப்பிரிவு சேவை குழுவினர் , கட்டளை அதிகாரிகள் மற்றும் படைப் பிரிவின் கீழுள்ள ஏனைய சிப்பாய்களை அறிமுகம் செய்து வைத்தார். இதன் பின்னர் படைப்பிரிவின் வளாகத்தில் சந்தன மரக்கன்று நட்டு வைக்க அழைக்கப்பட்டார்.

பின்னர் படையணிகளில் உள்ள அனைத்து கட்டளை அதிகாரிகளாலும் நடத்தப்பட்ட விரிவான விளக்கமளிப்புக்குப் பின்னர், படைப்பிரிவு சிப்பாய்களின் தற்போதைய நிலைநிறுத்தம் மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்து அவருக்குக் தெரிவிக்கப்பட்டது. முதலாவது படையணியின் தளபதியால் கோப்ரல் உணவகத்தில் அனைவருக்கும் மத்தியில் உரையாற்றினார். மேலும் படைப்பிரிவின் விருந்தினர் பதிவேட்டில் என்னங்களை பதிவிட்டார். இந்நிகழ்வின் இறுதியில் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்கவிற்கு 53 வது படைப் பிரிவின் படை தளபதியால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.