09th November 2021 19:11:28 Hours
14 வது பொறியியல் சேவை படையணிக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட இராணுவத் தலைமையகத்தின் புதிய சமையலறை தொகுதி இராணுவ தலைமையக பட்டாலியன் கட்டளை அதிகாரி. பிரிகேடியர் இந்திக பெரேராவின் அழைப்பின் பேரில் இன்று (9) காலை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர்களின் நலன்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட சமயலறை தொகுதியின் பெயர்பலகையை ஜெனரல் ஷவேந்திர சில்வா திறைநீக்கம் செய்து வைத்தார்.
இதன்பின்பு, பிரதம அதிதி கேஸ் குக்கர்களில் ஒன்றை ஏற்றி, புதிய சமையலறையில் அதன் சமையல் செயல்பாடுகளை அடையாளப்பூர்வமாகத் ஆரம்பித்து வைத்தார். அங்கு பெரும்பாலான நவீன உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் காணப்படுவதுடன் ஒரே நேரத்தில் 5,000 இராணுவ சிப்பாய்களுக்கு உணவு சமைக்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சமையலறையில் நவீன குளிர்சாதன பெட்டிகள், கொதிகலன்கள், தேங்காய் துருவல், கிரைண்டர்கள், பிளெண்டர்கள், அவன்கள் போன்றவற்றைக் கொண்ட இந்த புதிய சமையலறை கட்டிடம் 14 வது பொறியாளர் சேவைகள் பிரிவினரின் சிப்பாய்களால் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களையும் அவர்களின் மனிதவளத்தையும் பயன்படுத்தி முடிக்கப்பட்டது. இராணுவத் தளபதி சமையலறையை மேற்பார்வை செய்யும் போது, அங்கு சமையல் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள சமையல்காரர்கள் மற்றும் இராணுவ சிப்பாய்களுடன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
இராணுவ தலைமையக பட்டாலியன்களின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் இந்திக்க பெரேரா அவர்கள் அங்கு வருகை தந்ந இராணுவ தளபதியை வரவேற்றதுடன் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேகொட மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகளும் சுகாதார ஒழுங்கு விதிகளை கடைபிடித்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.