Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 21:00:22 Hours

படைப்பிரிவு தளபதிகள் மற்றும் பிரிகேட் தளபதிகளுடன் முல்லைத்தீவு தளபதி சந்திப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக புதிதாக நியமனம் பெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சய வணசிங்க (நவம்பர் 4 மற்றும் 6) ஆம் திகதிகளில் படைப்பிரிவு தளபதிகள் மற்றும் பிரிகேட் தளபதிகளுடன் அந்தந்த பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசித்தார்.

இதன்போது, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களால் இராணுவத்தின் முன்னகர்விற்கான மூலோபாய திட்டமிடல் ‘2020 – 2025’ தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் 57,59,64,66 மற்றும் 68 வது படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.