Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 17:45:13 Hours

ஆரம்ப பிரிவு பாடசாலையை திறக்கும் முன்னதாக 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் சிரமதானம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் கீழுள்ள 643 வது பிரிகேடின் 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சிப்பாய்களால் முதியன்கட்டு குளத்திலுள்ள ,மருது பிரதேச ஆரம்ப பிரிவு பாடசாலையை திறப்பதற்கு முன்னதாக அப்பாடசாலையில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

643 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 13 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையின் கீழ் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.