Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 11:03:24 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டியவுக்கு தாய் படையணியில் பிரியாவிடை

இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெறும் விஜயபாகு காலாட்படை படையணியின் 19 வது படைத் தளபதியும், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய அவர்களுக்கு , குருணாகல், போயகன, விஜயபாகு காலாட் படையணியின் தலைமையகத்தில் வியாழன் (04) சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த தளபதிக்கு விஜயபாகு காலாட் படையணியின் நிலையத் தளபதியவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.அதனையடுத்து படையணியினரால் நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து தளபதியினால் போரில் உயிர் நீத்த விஜயபாகு காலாட் படையணி படையினரின் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தளபதிக்கு இராணுவ மரபுகளுக்கமைய சீரான உடையணிந்த சிப்பாய்களால் படையணியின் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதோடு, தளபதியால் படையணியின் முன்னாள் வீரர்கள் மரியாதையுடன் நினைவுகூறப்பட்டனர். அத்தோடு விஜபாகு காலாட் படையணியை இலங்கை இராணுவத்தின் வலுவான படையணிகளில் ஒன்றாக கட்டமைப்பதற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முன்னாள் வீரர்களையும் நினைவுப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து ஓய்வுபெறும் தளபதி தனது அலுவலக கடமைகளை கைவிடுவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டதோடு, படையணியின் புதிய தளபதியாக நியமனத்தை ஏற்றுக்கொள்ளவிருக்கும் இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்த பின்னர் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இதன்போது விஜயபாகு காலாட் படையணிக்காக அர்ப்பணிப்பான சேவையாற்றிய தளபதிக்கு அனைத்து தலைமையகங்கள் சார்பாக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதோடு, ஆரோக்கியமானதும் அமைதியானதுமாக ஓய்வு வாழ்க்கை கிட்டட்டும் என்றும் வாழ்த்தினர்.

35 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பின்னர், ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்படுவதற்கு முன்பாக சேவையை பாராட்டுவதற்கான நினைவு பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வுகள் சுகாதார அதிகாரிகள் மற்றும் இராணுவ தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி முன்னெடுக்கப்படமை சிறப்பம்சமாகும்.