Header

Sri Lanka Army

Defender of the Nation

09th November 2021 19:12:29 Hours

யாழ்ப்பாணப் படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட 50 தொன் சேதன பசளை 30 யாழ். விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

அதிமேதகு ஜனாதிபதியவர்களின் “சௌபாக்கியே தெக்ம” கொள்கைத் திட்டத்திற்கமைய இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் சேதன பசளை உற்பத்தி திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட 50 தொன் சேதன பசளைத் தொகை இன்று (03) காலையில் பலாலியிலுள்ள இராணுவ பண்ணைக்கு அழைக்கப்பட்டிருந்த யாழ். விவசாயிகள் சிலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் பணிப்பக பணிப்பாளர், சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து மேற்படி சேதன பசளைத் தொகை அடையாளபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

அதிமேதகு ஜனாபதியவர்களின் கொள்கைத்திட்டத்திற்கமைய மேற்படி பகுதிகளில் வாழும் விவசாயிகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற படையினரின் பயன்பாட்டிற்காக இராணுவ தளபதியின் எண்ணக்கருவுக்கமைவான “துரு மித்துரு நவ ரட்டக்” செயற்றிட்டத்தின் கீழ் சேதன பசளை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் உற்பத்தி செய்யப்பட்ட 86.9 தொன் சேதன பசளை ‘லக் பொஹொர’ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.

அதேவேளை பலாலி இராணுவ பண்ணையில் நிறுவப்பட்ட சேதன பசளை உற்பத்தி தளத்தை திறந்து வைக்கும் வகையில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் அடையாளபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு மற்றும் இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ் ராஜபக்ஷ உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இதன்போது மேற்படி பசளை உற்பத்தி தளத்திள் மேற்பார்வை விஜயத்தை மேற்கொண்ட இராணுவ தளபதி உர உற்பத்திகாக பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் பார்வையிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த இராணுவ தளபதி, இராணுவம் இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்கும் வகையில் தற்போதும் உர உற்பத்திச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதோடு, கிழக்கு பாதுகாப்பு படையினரால் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். பலாலியில் அமைந்துள்ள உர உற்பத்தி தளத்திற்குள் சேதன பசளை உற்பத்திக்கான பிரிவை நிறுவி அதனூடாக குடாநாட்டின் விவசாயிகளுக்கு 4000 லீற்றர் “திரவ உரம்” உற்பத்தி செய்வற்கு இராணுவத்திற்கு இயலுமை உள்ளதெனவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் வசிக்கும் விவசாயிகளுக்கு பெருமளவான சேதன பசளை விநியோகிப்படுவது இதுவே முதல் தடவையாகும். இத்திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று (03) காலை வேளையில் இராணுவ பண்ணைக்குள் நிறுவப்பட்டிருக்கும் சேதன பசளை உற்பத்தி நிலையம் பொது மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் படையினரால் உர உற்பத்தி செயற்பாடுகளை இலகுவாக்கு வகையில் நான்கு புதிய இயந்திரங்களை தயாரிக்கப்பட்டுள்ளமையால், இந்த திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக அதிக விலையுடைய இயந்திரங்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போயுள்ளது. அந்த புதிய இயந்திரங்களில் 5 வது பொறியியல் சேவை படையணியின் சிப்பாய்களால் வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வழங்கல் பிரிவு பதவி நிலை அதிகாரி I லெப்டினண் கேணல் பீடீஎல்ஏசீ சிறிசேன அவர்களினால் தயாரிக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை அரைக்கும் இயந்திரம் மற்றும் உர உற்பத்திக்கான மூலப்பொருட்களை ஒன்றுசேர்க்கும் இயந்திரம் என்பனவும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.