Header

Sri Lanka Army

Defender of the Nation

09th November 2021 12:40:04 Hours

தொல்லியல் அம்சமான கூரகல விகாரையின் முதலாவது கட்டின சீவர பூஜை

பலாங்கொடை கல்தோட்டை பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கூரகல ரஜமஹா விகாரை மற்றும் கூரகல குகைக் கோயில் என்பன பிரபலம் மிக்கவையாக அறியப்படும் நிலையில் அதன் வராலாற்று முக்கியத்துவத்தை மீள வலியுறுத்தும் விதமாக 7 ஆம் திகதி காலையில் ஆரம்பமான விகாரையின் புத்த சாசன வராலாற்றில் முதலாவது முறையாக மேற்படி விகாரையின் ‘கட்டின சீவர பூஜை’ நிகழ்வுகள் பௌத்த மத சம்பிரதாயங்களுக்கமைவாக 200 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகளின் தலைமையில் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் பக்தர்களுடன் கலந்துகொண்டிருந்தார்.

கூரகல மடாலயம் மற்றும் நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையம் ஆகியற்றின் தலைமை தேரர் வண. வதுரகும்புரே தம்மரதன தேரர் ஒரு வருடத்திற்கு முன்பாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக,தொல்லியல் அம்சமாவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழும் இந்த விகாரையின் மீள் கட்டுமான பணிகள் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பௌத்தர்கள், பௌத்த மதத்தை சாராதவர்களின் ஆதரவுடனும் இராணுவத்தின் ஆளணியுடன் புணரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக மகா சங்கத்தினருக்கு 'கட்டின' வழங்கும் துறவர பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் பக்தியுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பு பௌத்தர்களுக்கு வருடத்திற்கு ஒரு தடவை மாத்திரமே கிடைப்பதோடு, பிக்குகளுக்கான தகைமைகளை கொண்டவர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கி வைக்கப்படுகின்றன. “வஸ்” பருவமெனப்படும் மழையின்றி வறட்சி நிலவும் மூன்று மாத காலத்தின் நிறைவில் மழை வரவேண்டி பிரார்த்தனை செய்வதற்காக இந்த சம்பிரதாயம் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஞாயிற்றுக்கிழமை (7) அதிகாலை தாள வாத்திய கலைஞர்கள், நடனக் குழுக்கள், வெண்ணிற ஆடை அணிந்து கொடி ஏந்தியவர்கள் ஆகியோரால் ஒழுங்குமுறைப்படி கட்டின சீவர நிகழ்விற்கான நன்கொடையாளர்களுடன் வழிபாட்டுக்காக கட்டமைக்கப்பட்ட மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தொல்லியல் சின்மாக விளங்கும் குறித்த விகாரையை புனரமைத்து அதனை பக்தர்களிடம் கையளிப்பதற்கான கோரிக்கை விகாரையின் தலைமை தேரரும் நெல்லிகல சர்வதேச பௌத்த மையத்தின் தலைவருமான வத்துரகும்புரே தம்மரதன தேரரினால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் விடுக்கப்பட்டிருந்தமைகமைய இந்த விகாரை மறுசீரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, 'ஹீல் தான' (காலை உணவு) வழங்கப்பட்டதை தொடர்ந்து பிக்குகளுக்கு 'பிரிகர' தானமாக வழங்கப்பட்டன. அதற்கு முன் ஒரு சிறப்பு 'புண்யானுமோதன' (சொற்பொழிவு) பிக்கு ஒருவரால் நிகழ்த்தப்பட்டது. சிரேஸ்ட பிக்கு ஒருவரால் மத அனுஷ்டானங்கள் நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, விழாவில் கலந்துகொண்ட ஒரு மதகுருவால் 'அனுஷாசனம்' ஒழுக்க நெறிகள் தொடர்பிலான இரு நாள் விழாவில் சொற்பொழிவு நிகழத்தப்பட்டது. இதன்போது 'பிங்கம' நிகழ்வில் பங்கெடுத்த தேரரால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. 200 க்கும் மேற்பட்ட மகா சங்க உறுப்பினர்கள் நண்பகல் 'சங்கீக தானம்' நிறைவடைந்த பின்னர் பிக்குகளுக்கு 'கட்டின சீவரய' வழங்கும் விஷேட நிகழ்வு ஆரம்பமானது.

அத்தோடு விகாரையின் மறுமலர்ச்சிகாக இராணுவத்தினர் வழங்கிய அயராத பங்களிப்பின் நினைவம்சமாகவும், மேற்படி வரலாற்று தலம் புத்துயிர் பெறுவதை அடையாளப்படுத்தும் விதமாகவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் நாக மரக்கன்று ஒன்று நாட்டி வைக்கப்பட்டது. புதிய பிரசங்க மண்டபத்தினுள் உள்ள எண்கோண வடிவான பிரித் மண்டபத்தில் சனிக்கிழமை (6) இரவு 'பிரித்' பாராயண நிகழ்வுடன் விழா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமானது. அதனையடுத்து பிரதம விருந்தினரால் விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்ட பின்னர் பிக்குகளுக்கு 'கிலன்பச' வழங்கப்பட்டது. பின்னர், பிரதம அதிதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா, 'பிரிவென் போதி வஹன்சே' (தூய்மை மிக்கதான பாலி ஓலைச்சுவடிகள்) காணப்படும் பெட்டி கொண்டுவரப்பட்டதோடு, பிரித் பாராயணம் செய்வதற்கான சம்பிரதாயபூர்வமான அழைப்பினை இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவரும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா அவர்களால் வண. வதுரகும்புரே தம்மரதன தேரர் அவர்களுக்கு தாம்பூலம் வழங்கி விடுக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற பிரதான 'கடின' விழாவின் முன்னதாக, சனிக்கிழமை (6) இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வுகளின் போது, 'பஹன்கந்த தெருவன் வந்தனவ' (மும்மணி அஞ்சலி), சமய சொற்பொழிவுகள், பௌத்த வழிபாடுகள் மற்றும் 'சத்துமதுர' ஆகிய பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சப்ரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ டிக்கிரி கொப்பேகடுவ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், சிரேஷ்ட அரச அதிகாரிகள், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பக்தர்களும் கலந்துகொண்டனர். 'கட்டின' விழாவில் கலந்து கொண்டவர்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றினர்.