Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 22:03:29 Hours

வரலாற்று சிறப்புமிக்க நல்லிணக்க சின்னமாக விளங்கும் கூரகல விகாரையின் மறுசீரமைப்பை முன்னிட்டு ‘கட்டின பூஜை’ நிகழ்வு ஆரம்பம்

பலாங்கொடை கல்தோட்டை பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கூரகல ரஜமஹா விகாரை மற்றும் கூரகல குகைக் கோயில் என்பன பிரபலம் மிக்கவையாக அறியப்படும் நிலையில் பல காலமான ஆக்கிரமிப்புக்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் அதன் வராலாற்று முக்கியத்துவத்தை மீள வலியுறுத்தும் விதமாக நவம்பர் 6 -7 ஆம் திகதிகளில் புத்த சாசன வராலாற்றில் முதலவாது முறையாக மேற்படி விகாரையின் ‘கட்டின சீவர பூஜை’ நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கூரகல மடாலயம் மற்றும் நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையம் ஆகியற்றின் தலைமை தேரர் வண. வதுரகும்புரே தம்மரதன தேரர் ஒரு வருடத்திற்கு முன்பாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக,தொல்லியல் அம்சமாவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் திகழும் இந்த விகாரையின் மீள் கட்டுமான பணிகள் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் பௌத்தர்கள், பௌத்த மதத்தை சாராதவர்களின் ஆதரவுடனும் இராணுவத்தின் ஆளணியுடன் புணரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.

புதிய பிரசங்க மண்டபத்தினுள் உள்ள எண்கோண வடிவான பிரித் மண்டபத்தில் சனிக்கிழமை (6) இரவு 'பிரித்' பாராயண நிகழ்வுடன் விழா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமானது. அதனையடுத்து பிரதம விருந்தினரால் விளக்குகள் ஏற்றிவைக்கப்பட்ட பின்னர் பிக்குகளுக்கு 'கிலன்பச' வழங்கப்பட்டது. பின்னர், பிரதம அதிதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா, 'பிரிவென் போதி வஹன்சே' (தூய்மை மிக்கதான பாலி ஓலைச்சுவடிகள்) காணப்படும் பெட்டி கொண்டுவரப்பட்டதோடு, பிரித் பாராயணம் செய்வதற்கான சம்பிரதாயபூர்வமான அழைப்பு விடுக்கப்படுவதற்கு தளபதியவர்களால் சம்பிரதாயபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டது.

இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவரும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ். செனரத் யாப்பா, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரையில் வசிக்கும் வண. வதுரகும்புரே தம்மரதன தேரருக்கு பாரம்பரிய வெற்றிலை தட்டை (தெஹெத் வட்டிய) வழங்கினார். முக்கியத்துவம் மிக்க இந்த புனித வளாகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு காலத்திற்குரிய இடிபாடுகளுடன் கூடிய கற் குகைகளுடன் பழமையான பௌத்த மடாலயம் என்பவற்றையும் உள்ளடக்கியுள்ளதோடு, ஆரம்பகால மனித குடியேற்றத்தின் வரலாற்றைக் கொண்டுள்ளது. இதன்போது, மகா சங்கத்தின் சார்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வண. (பேராசிரியர்) மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரர் 'அனுசாசன' (சொற்பொழிவு) நிகழ்த்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற பிரதான 'கடின' விழாவின் முன்னதாக, சனிக்கிழமை (6) இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வுகளின் போது, 'பஹன்கந்த தெருவன் வந்தனவ' (மும்மணி அஞ்சலி), சமய சொற்பொழிவுகள், பௌத்த வழிபாடுகள் மற்றும் 'சத்துமதுர' ஆகிய பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சப்ரகமுவ மாகாண ஆளுநர் கௌரவ டிக்கிரி கொப்பேகடுவ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், சிரேஷ்ட அரச அதிகாரிகள், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பக்தர்களும் கலந்துகொண்டனர். 'கட்டின' விழாவில் கலந்து கொண்டவர்கள் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றினர்.