Header

Sri Lanka Army

Defender of the Nation

07th November 2021 05:52:03 Hours

விஜயபாகு காலாட்படை படையின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்கிறார்

விஜயபாகு காலாட் படையணியின் 20 வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே 05 நவம்பர் 2021 அன்று குருநாகல் போயகன விஜயபாகு காலாட்படை படைத் தலைமையகத்தில் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இடம்பெற்ற நிகழ்வின் போது பதவியேற்றுக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே விஜயபாகு காலாட் படையணியின் தலைமையகத்திற்கு வருகை தந்த போது, விஜயபாகு காலாட்படை படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் சுமல் ஹேமரத்ன புதிய தளபதிக்கு அன்புடன் வரவேற்பளித்தார். அதனையடுத்து இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து போரில் உயிர் நீத்த விஜயபாகு படையணி வீரர்களின் நினைவு தூபியிற்கு தளபதி அஞ்சலி செலுத்தினார்.

அதனையடுத்து மத அனுட்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே கையொப்பமிட்டார். அதனையடுத்து பதவியேற்பின் நினைவம்சமாக படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார். அதனை தொடர்ந்து குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட புதிய தளபதி படையணி பலநோக்கு பல்திறன் செயற்பாட்டு அறை மண்டபத்தில் படையினருக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார். இந்த உரை சூம் தொழில்நுட்பம் மூலம் விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தின் கட்டளை அலகுகளுக்கும் ஔிபரப்பட்டது.

புதிய தளபதி தற்போது தியதலாவையிலுள்ள இலங்கை இராணுவ பயிற்சி கட்டளைகளின் தளபதியாக நியமனம் வகிக்கின்ற அதேவேளை இந்த புதிய நியமனங்களை பெற்றுக்கொள்ளும் முன்பாக 53 வது படைப்பிரிவின் தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே 21 ஜூலை 1987 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதோடு கொழும்பு சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவ பயிற்சியிகளை பெற்றுக்கொண்டார். அவர் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் 23 ஜூன் 1989 அன்று இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் முதலாவது விஜயபாகு காலாட்படை படையில் இணைக்கப்பட்டார். குறித்த சிரேஸ்ட அதிகாரி கலிபோர்னிய கடற்படை முதுகலை கல்லூரி, அமெரிக்க மரின் கோர்ப்ஸ் பல்கலைக்கழகம் வேர்ஜினியா, அமெரிக்கா மற்றும் இலங்கை களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களை பெற்றுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.