Header

Sri Lanka Army

Defender of the Nation

05th November 2021 16:01:44 Hours

கொரியாவிற்கான இலங்கை தூதுவரால் புற்றுநோயைக் கண்டறியும் உபகரணம் நன்கொடை

கொரியாவிற்கான இலங்கை தூதுவர் அதிமேதகு கலாநிதி, ஏ சாஜ். யு மென்டிஸ் இன்று (5) இராணுவ தளபதியின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போது அவரால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு புற்றுநோயை கண்டறிவதற்கான உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது இராணுவத்தின் பிரதிச் செயலாளர் பிரிகேடியர் பிரதீப் குலதுங்க அவர்களால் வருகைத் தந்த இராஜதந்திரிக்கு பிரதான நுழைவாயிலில் வரவேற்பளிக்கப்பட்டு தளபதியுடனான கலந்துரையாடலுக்காக தளபதியின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் இலங்கையின் புற்றுநோயாளர்களின் நலன் கருதி மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியமையையிட்டு தூதுவருக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நன்றிகளை கூறிக்கொண்டார். நாட்டின் மருத்துவ தரத்தை மேம்படுத்துவதற்கும் வறிய மக்களுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கும் பல ஆண்டு காலமாக இரு நாடுகளினாலும் பகிர்ந்துகொள்ளப்படும் உதவிகள் வரவேற்கத்தக்கவை என்றும்இரு நாடுகளும் சிறந்த மற்றும் ஆரோக்கியமான உறவைப் பேணுவற்கு சிறந்த இராஜதந்திர அவை வாய்ப்பாக அமையுமெனவும் வலியுறுத்தினார்.

கொரியா குடியரசின் சர்வதேச பரிமாற்ற மேம்பாட்டு சங்கத்தினால் இலங்கை மக்களுக்காக அளிக்கப்பட்ட பெருந்தன்மையாக அன்பளிப்புக்கும் தளபதி நன்றிகளை கூறிக்கொண்டார்.

கலந்துரையாடலின் நிறைவில் ஜெனரல் சவேந்திர சில்வா, அதிமேதகு கலாநிதி ஏ சாஜ் யூ மெண்டிஸ் அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதோடு அவரது எதிர்கால பணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.