Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 17:12:13 Hours

கூரகல விகாரையின் ‘கட்டின சீவராய’ வழிபாட்டிற்காக இராணுவ தலைமையகத்திற்கு

மீண்டும் எழுச்சி பெறும் கூரகல பௌத்த விகாரையின் தலைமைய தேரரின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ ஆளணி மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியுடன் விகாரையின் கட்டின சீவர பூஜை நிகழ்வுகள் 6-7 ஆம் திகதிகளில் விகாரை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கூரகல விகாரையின் நிகழ்வுகள் ஆரம்பமாவதுக்கு முன்னதாக வியாழக்கிழமை (4) மாலை ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்கு வணக்கத்திற்குரியதான 'கட்டின சீவராய' ஊர்வளமாக எடுத்து வரப்பட்ட போது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவரது பாரியாரும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியுமான திருமதி சுஜீவா நெல்சன், சிரேஸ்ட அதிகாரிகள், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இலங்கை இராணுவ தொண்டர் படையின் தளபதி இராணுவ பௌத்த சங்கத்தின் தலைவருமான மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா தலைமையில் இவ்வாறு ஊர்வலமாக இராணுவத் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்ட ‘கட்டின சீவராய’ பிரதான நுழைவாயிலில் இராணுவ தளபதியின் செயலாளர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வளாகத்தில் வைத்து ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்தவர்களின் முன்னிலையில் மத வழிபாடுகளுக்கான நிர்மாணிக்கப்பட்ட புதிய மேடையின் மீது கட்டின சீவரய வைக்கப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற மத நிகழ்வுகளை வழிநடத்திய வண. வல்பொல கோதம தேரர் கூரகல விகாரையின் புனரமைப்பு பணிகளுக்காக இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்புக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இராணுவ தலைமையகத்தின் இடம்பெற்ற “பிங்கம” அன்னதான நிகழ்வின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களால் அளிக்கப்பட்ட வழங்கப்பட்ட வழிபாடுகளுக்கான பொருட்களை பெற்றுக்கொண்ட தேரரினால் வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்ந்தும் நடத்திச் செல்லப்பட்டன.

இதன் போது இராணுவ தலைமைய சிப்பாய்களின் சிரேஸ்ட அதிகாரி மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.