04th November 2021 14:00:54 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகமத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா புதன்கிழமை (3) 51 வது படைப்பிரிவு தலைமையகத்தினால் விதவை பெண்னொருவரின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டை வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அமெரிக்கன் சிலோன் மிஷன் தேவாலயத்தின் நிதி உதவியுடன் இத்திட்டம் 9 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி சிப்பாய்களின் மனித வளம் மற்றும் தொழில்நுட்ப உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
32 மற்றும் 20 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான திருமதி மகேந்திரராசா அமிர்தமலர் என்னும் விதவை பெண்ணின் கணவன் 5 வருடங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக உயிரிழந்துவிட்ட நிலையில் வீடொன்று இல்லாமல் அல்லல்பட்டு வந்த குடும்பத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு, நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் பெயர் பலகையை திறைநீக்கம் செய்து வைத்த ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் வீட்டின் சாவியையும் பயனாளிகளுக்கு கையளித்தார்.
இந்நிகழ்வின் போது பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளும் வீட்டு உபயோக பொருட்களும் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இராணுவத்தின் மனித வளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் யாழ். குடாநாட்டில் மாத்திரம் 755 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அதன்பதி அரசாங்க நிறுவனங்கள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, சிவில் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் இலங்கையர்களால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் யாழ். படையினரால் 556 வறிய குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல் இராணுவத்தினரின் சொந்த நிதியைப் பயன்படுத்தி குடாநாட்டில் உள்ள வறிய குடும்பங்களுக்காக இதுவரையில் 198 புதிய வீடுகளை நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரைநகர், புத்தூர் கிழக்கு, சந்திராபுரம், சங்குவேலி, வத்திராயன் ஆகிய பகுதிகளிலும் சுன்னாகத்தில் முன்னாள் போராளிக்காக நிர்மாணிக்கபட்டுவரும் புதிய வீடு புதிய வீடு உள்ளடங்களாக 6 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதோடு மேலும் பல வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு, 51 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.