Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2021 18:04:02 Hours

நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இலங்கை பீரங்கி படையணியின் சிப்பாய்களால் புதிய வீடு நிர்மாணிப்பு

நன்கொடையாளர்களால் கிடைக்கப்பெற்ற நிதி உதவியின் மூலம், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 233 வது பிரிகேடின் 7 வது இலங்கை பீரங்கி படைச் சிப்பாய்கள் மின்னேரியா பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்காக நிர்மாணித்த மேலும் ஒரு புதிய வீட்டை வெள்ளிக்கிழமை (29) குடும்பத்தாரிடம் கையளித்தனர்.

மின்னேரியா, மஹரத்மலையைச் சேர்ந்த திருமதி பி.ஜி. ரோஹினி குமாரி விக்கிரமபால அவர்கள் தனது அவல நிலைமை தொடர்பில் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஜெனரல் சன்ன வீரசூரியவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததை தொடர்ந்து இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய வீட்டின் நிர்மாண பணிகள் 7 வது பீரங்கி படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் சந்தன ஹரிச்சந்திரவின் மேற்பார்வையின் கீழ் படையினரால் நிறைவு செய்யப்பட்டிருந்தோடு, பிரதேசத்திலுள்ள நன்கொடையாளர்களின் நிதி உதவிகளை கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே,கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட சிவில் விவகார அதிகாரி கேணல் உஷான் குணவர்தன, 7 வது இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் சந்தன ஹரிஸ்சந்திர மற்றும் வீட்டின் நிர்மாண பணிகளை முன்னெடுத்திருந்த சிப்பாய்கள், பிரதேச வாசிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும்.