30th October 2021 20:21:03 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68 வது படைப் பிரிவுத் தலைமையகம், அரசாங்கத்திற்கு உரித்தற்ற காணிகளை விடுவிக்கும் அரசாங்க கொள்கை திட்டத்திற்கு அமைவாக மேலும் 11 ஏக்கர் காணி, 682 பிரிகேட் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற நிகழ்வின் போது முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு கையளிக்கப்பட்டது.
இதுவரையில் பாதுகாப்பு நோக்கங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்க பயன்படுத்தப்பட்டு வந்த காணிகள் சொத்துக்களை அரசாங்கத்தின் ஆலோசனைக்கமைய மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியம் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலிக்கமைய முறையாக விடுவிக்கும் திட்டம், இடம்பெறுவதோடு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய, 682 வது படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட அறிவுரைக்கமைய பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட மேற்படி காணிகள் விடுவிக்கப்பட்டன.
இந்நிகழ்வின் போது முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய அவர்களினால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு கே.விமலநாதனிடம் காணி விடுவிப்பு தொடர்பான ஆவணங்கள் உத்தியோகபூர்வமான கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு. எஸ்.ஜெயகாந்தன், புதுக்குடியிருப்பு காணி அதிகாரி திரு.வில்வலராஜா, 68 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார, 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி, 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தி, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் வசந்த பல்லேகும்புற ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.