Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2021 18:30:02 Hours

மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க 51 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக பொறுப்பேற்பு

கோப்பாயில் அமைந்துள்ள 51 வது படைப்பிரிவின் 30 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க புதன்கிழமை (27) சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட நிகழ்வின் போது அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது படைப்பிரிவின் சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்தை தொடர்ந்து பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு 51 வது படைப்பிரிவின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.

51 வது படைப்பிரிவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.