Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2021 16:49:04 Hours

ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய மற்றும் அவரது பாரியாரின் அர்பணிப்புகளுக்கு இராணுவ தளபதியிடமிருந்து பாராட்டு

34 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றிய முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய தான் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு அவரது குடும்பத்தாருடன் திங்கட்கிழமை (1) பாதுகாக்ப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.

விஜயபாகு காலாட்படையணியின் தலைசிறந்த காலாட்படை வீரர்களுள் ஒருவராகவிருந்து ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டியவின் சேவையைக்கு ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டுகளை தெரிவித்தார். 2009 ஆண்டுக்கு முன்னர் வடக்கில் எல்டிடி பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர் மேற்கொண்ட அர்பணிப்பிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்த இராணுவத் தளபதி 573 வது பிரிகேட் மற்றும் எயார் மொபைல் பிரிகேட் தளபதியாக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவைகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது, பிராந்திய ஒருமைப்பாட்டை காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தனது கனவனை பிரிந்து தியாகம் செய்த திருமதி அவந்தி பிலப்பிட்டிய, மகளான ரண்ஷிகா மற்றும் மகனான சிராத் ஆகியோருக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டுக்களை தெரிவித்தார்.

“கணவர் மீது புரிதலுடன், எந்த ஒரு வீட்டுச் சுமையையும் அவரின் மீது சுமத்தாமல், தேசப்பற்றுள்ள மண்ணின் மைந்தனாக ஓர் உன்னதமான சேவையில் ஈடுபடுவதற்கு உகந்த மனப்பான்மையை உங்கள் கணவரிடம் உருவாக்கினீர்கள். அதே நேரத்தில், குழந்தைகளை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்கும் முழுப் பொறுப்பையும் நீங்கள் தனிமையில் ஏற்றுக்கொண்டீர்கள். அப்படி இல்லாமல் இருந்திருந்தால், 2009 மே மாதத்திற்குப் பிறகு, எங்கள் போர்வீரர்கள் அன்றைய நாளை வென்று நம் தாய்நாட்டில் அமைதியை ஏற்படுத்தியிருக்க முடியாமல் போயிருக்கும். அந்த விலைமதிப்பற்ற அர்பணிப்புக்கு பாராட்டுகளை அனைத்து தாய்மார்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் சார்பாகவும் உங்கள் குடும்பத்தாருக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். இராணுவத்தின் முக்கியமான சவால்களை அமைதியாக தாங்கிக்கொண்டு எமது வீரர்களுக்கு அவர்களின் அதிகபட்ச உத்வேகத்திற்கு அதிக ஊக்கத்தை அளித்தவர்கள் என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாராட்டுகளை தெரிவித்தார்.

அவரது எதிர்கால முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா, கலந்துரையாடலின் நிறைவில் அவருக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கியதோடு விசேட பாராட்டுச் சான்றிதழ் ஒன்றோடு சேவையின் அடையாளமாக வாள் ஒன்றினையும் வழங்கி வைத்தார். அதனையடுத்து, கனவர் தாய்நாட்டைக் காக்கும் பணிகளுக்காக அவரை விட்டு பிரிந்து தன்னை அர்ப்பணித்தமைக’காக பாராட்டி ஜெனரல் ஷவேந்திர சில்வா திருமதி அவந்தி பிலப்பிட்டிய அவர்களுக்கு பரிசுப்பொதி ஒன்றினையும் வழங்கி வைத்தார்.

விஜயபாகு காலாட் படையணியின் தளபதியாகவிருந்த மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் பெற்றுக்கொள்ளும் முன்னர், 55வது படைப் பிரிவு தளபதி, ஆளணி நிர்வாக பணிப்பகத்தின் பணிப்பாளர், மாதுருஓயா இராணுவ பயிற்சி கல்லூரியின் தளபதி, இராணுவ தலைமையகத்தின் சிரேஸ்ட பாதுகாப்பு இணைப்பாளர், 513 வது பிரிகேட் தளபதி, எயார் மொபைல் பிரிகேட் தளபதி, கேணல் இராணுவ செயலாளர், ஹயிடி 10 ஐநா அமைதிகாக்கும் படைகுழுவின் கட்டளை அதிகாரி, 573வது பிரிகேட் தளபதி மற்றும் பல்வேறு முக்கியமான நியமனங்களை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவரது வீரம், அர்ப்பணிப்பு மற்றும் இராணுவ சேவையைப் பாராட்டி அவருக்கு ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

1986 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக பாடநெறி 27 இல் இணைந்து கொண்ட அவர், 2வது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டு 1 வது பட்டாலியன் விஜயபாகு காலாட்படையணிக்கு படையின் நியமிக்கப்பட்டார். பின்னர் போயகனே விஜயாபாகு காலாட் படையணியின் தலைமையக நிலைய தளபதியாக நியமிக்கப்பட முன்னர் அவர்1 வது பட்டாலியன் விஜயபாகு காலாட்படையணி மற்றும் 6 வது பட்டாலியன் விஜயபாகு காலாட் படையணிகளின் கட்டளை அதிகாரியாக நியமனம் வகித்த பெருமையும் அவரை சார்ந்துள்ளது.