Header

Sri Lanka Army

Defender of the Nation

01st November 2021 14:50:16 Hours

பதுளையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு படையினர் உதவி

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 112 பிரிகேடின் கீழ் உள்ள 2 வது இலங்கை ரைபிள் படையணியின் சிப்பாய்களால் கடந்த 72 மணி நேரத்தில், தெஹியன்வல, முத்தியங்கனை விகாரை , சுமனதிஸ்ஸகம, நீர்வளங்கள் முகாமைத்துவ நிலைய காரியாலயம் ஆகிய பொதுப் பிரதேசங்களில் பெய்த பெரு மழையினால் மண்சரிவு, வெள்ளம் மற்றும் அவசரநிலைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கினர்.

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை நகரின் பொதுப் பகுதிகள் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கம் , புயல் காற்று வீச்சு காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகளால் அப்பகுதியின் வாகன போக்குவரத்துச் செயற்பாடுகளுடன் இயல்பு நிலைமையும் பாதிக்கப்பட்டிருந்தது.

112 வது பிரிகேடின் 2 வது இலங்கை ரைபிள் படையணியின் சிப்பாய்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுவதற்கான உதவிகளை வழங்கினர். அதேநேரம் நீர்போக்கு வழிமுறைகள் மற்றும் அணைக்கட்டுக்கள், வடிகால்களை ஒரே சமயத்தில் சுத்தம் செய்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான தடங்களை அமைத்தனர். மறுமுனையில் 112 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் வாகனப் போக்குவரத்தை சீரமைப்பதற்காக படையினரால் வீதிகள் சுத்தம் செய்யப்பட்டன.

112 வது பிரிகேடின் 42 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், 2 வது இலங்கை ரைபிள் படையணியின் 57 இராணுவ வீரர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்ய முன்வந்திருந்ததோடு, தொடரும் மழையினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான பொதுமக்களுக்கு உதவினர். இதன்போது 2 வது இலங்கை ரைபிள் படையணியின் கட்டளை அதிகாரி கேணல் கே ஜயவீர அவர்களால் 29 - 30 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட மேற்படி தூய்மையாக்கல் பணிகள் மேற்பார்வை செய்யப்பட்டன.