Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2021 10:00:00 Hours

இராணுவத்திற்கு இராணுவம் ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் மேலுமொரு இராணுவ வழங்கல் பாடசாலை மாணவர் குழு இந்தியக்கு சுற்றுப்பயணம்

திருகோணமலை வழங்கல் பாடசாலையில் வழங்கல் பணியாளர்களுக்கான பாடநெறி எண்-7 ஐ தொடரும் 12 அதிகாரிகள் கொண்ட குழு இராணுவத்திற்கு இராணுவ ஒத்துழைப்பு எனும் திட்டத்தின் கீழ் வழங்கல் முகாமைத்துவம் தொடர்பிலான அனுபவங்களை பெற்றுகொள்வதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.

இராணுவ வழங்கல் பாடசாலையின் பிரதம பயிற்றுவிப்பாளர் கேணல் வைகேஎஸ் ரங்கிக தலைமையில் சிரேஸ்ட பயிற்றுவிப்பாளர் (பயிற்சிக் குழு II), பயிற்றுவிப்பாளர்கள் மூவர் மற்றும் 12 பயிற்சி அதிகாரிகள் உட்பட 17 அதிகாரிகள் அடங்கிய இராணுவ வழங்கல் பாடசாலையின் தூதுக்குழு 24 செப்டம்பர் 2021 அன்று இந்தியாவிற்கான 14 நாள் நல்லெண்ணப் சுற்றுப்பயணத்திற்கான புறப்பட்டுச் சென்றனர்.

இந்த விஜயத்தின் போது, பிரதிநிதிகள் குழு இந்தியாவின் ஐந்து முக்கிய நகரங்களான மும்பை, ஔரங்காபாத், பூனே, ஜபல்பூர் மற்றும் ஹைதராபாத் மற்றும் பத்து இராணுவ நிறுவனங்கள், ஐந்து சிவில் அமைப்புகள் மற்றும் ஏழு சுற்றுலாத் தளங்களுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதன்படி புனேவில் உள்ள இராணுவ பொறியியல் கல்லூரி (CME), புனேவில் உள்ள இராணுவ தொழில்நுட்ப நிறுவனம் (MILIT), புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்வியற் கல்லூரி (NDA), ஜபல்பூரில் உள்ள தர நிர்ணய கல்லூரி (CMM), செகந்திராபாத்தில் உள்ள இராணுவ மற்றும் மின்சார பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு முகாமைத்துவ கல்லூரி ஆகியவற்றுக்கு விஜயம் செய்தனர். இவ்விடங்களுக்கான சுற்றுப்பயணமானது பயிற்சி அதிகாரிகளுக்கு அவர்களது திறன்களை மேம்படுத்திகொள்ள ஆக்கபூர்வமான அனுபவமாக அமைந்திருந்து.

அத்தோடு இந்திய இராணுவத்தின் நிர்வாகத் தலைமையகங்களைப் பார்வையிடவும் தூதுக்குழு அழைத்துச் செல்லப்பட்டனர். மகாராஷ்டிரா குஜராத் மற்றும் மும்பையில் கோவா பகுதி, ஜபல்பூரில் உள்ள தலைமையக பகுதிகள் மற்றும் மத்திய பாரத பகுதி , ஹைதராபாத்தில் உள்ள தலைமையகம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா துணைப் பகுதிகள் ஆகிய இடங்களுக்கும் தூதுக்குழுவினர் விஜயம் செய்தனர். அதேபோல் இவ்விஜயம் வழங்கல் முகாமைத்துவச் செயற்பாடுகள் எவ்வாறு நிர்வாக நடவடிக்கைகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பிலும் இந்திய இராணுவத்தின் விநியோகத்திறன் மற்றும் தயார் நிலைமை தொடர்பிலும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமைந்தது. அதேபோல் இக்குழுவினர் இந்தியக் கடற்படையின் மிகப்பெரிய விமான தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கடற்படை கப்பல் தளத்தையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னர், மும்பையில் உள்ள இலங்கைக்கான கவுன்சிலர் ஜெனரல் அலுவலகம், மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையம், ஜபல்பூரில் உள்ள பீரங்கி வாகன தொழிற்சாலை, ஹைதராபாத் ,மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கான வியாபார நிலையம் ஆகியவற்றை இலங்கை பிரதிநிதிகள் குழு பார்வையிட்டது.

அவுரங்காபாத்தில் உள்ள எல்லோரா குகைகள், மகாயான பௌத்தத்தின் பாரம்பரிய குகைகள், புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் மற்றும் ஜைன தத்துவம் உள்ளிட்ட பிராமணர்களின் குகைகள் மற்றும் பௌத்த தத்துவத்துடன் தொடர்புடைய அஜந்தா குகை உட்பட இந்தியாவின் சுற்றுலா தலங்களையும் பார்வையிட இந்த குழு அழைத்துச் செல்லப்பட்டது.

அதனையடுத்து உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி இந்திய இராணுவத்தின் விருந்துபசாரத்திலும் தூதுக்குழு கலந்துகொண்டது.