Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2021 07:33:00 Hours

இராணுவத் தளபதிக்கு பரிசாக கிடைத்த மருத்துவ உபகரணங்கள் மேற்கு பாதுகாப்பு தலைமையக படையினரால் பகிர்ந்தளிப்பு

இலங்கை பாதுகாப்புப் பதவிநிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அமெரிக்க இலங்கைச் நலன்புரிச் சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட வைத்திய உபகரணங்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் மேற்பார்வையின் கீழ் படையினரால் களுத்துறை, கராப்பிட்டிய மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

கொவிட் – 19 நோயாளர்களின் நலன் கருதி களுத்துறை நாகொட வைத்தியசாலை, வலஸ்முல்லை வைத்தியசாலை மற்றும் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு 10 லீற்றர் ஒக்சிஜன் செறிவூட்டிகள், இரத்த அழுத்தத்தை அளவிடுவதற்கான கருவிகள் மற்றும் பல்ஸ் ஒக்சிமீட்டர்கள் அடங்கிய வைத்திய உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 612 வது மற்றும் 613 வது பிரகேட்களின் தளபதிகளினால் குறித்த உபகரணங்கள் சுகாதார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.