Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2021 07:45:00 Hours

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி மாணவர்கள் முல்லைத்தீவுக்கு சுற்றுப்பயணம்

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியில் பாடநெறி எண் 15 ஐ தொடரும் வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது அவர்களுக்கு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.

முள்ளிவாய்க்கால் பகுதியிலுள்ள போர் வெற்றியை குறிக்கும் நினைவு தூபி அமைந்துள்ள பகுதிக்கான கள விஜயத்தின் போது 68 வது படைப் பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டாரவினால் நிகழ்த்தப்பட்ட விளக்கமளிப்பு கலந்துரையாடலிலும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் 681 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.ஆர்.என் ஹெட்டியாராச்சி, 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.