Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2021 07:32:00 Hours

எத்தாவெட்டுனுவெவ கால்வாய் சுத்தப்படுத்தும் பணிகளில் இராணுவபடையினர் இணைவு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 621 வது பிரிகேடின் 14 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படையினர் 18 ஒக்டோபர் 2021 அன்று எத்தாவெட்டுனுவெவ பகுதியில் அமைந்துள்ள சுமார் 2000 மீற்றர் நீளமுள்ள எத்தாவெட்டுனுவெவ பிரதான நீர்ப்பாசனக் கால்வாயை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

மொனராவெவ ஸ்ரீ மயூரிவாபி விகாரையின் மகாநாயக்க தேரரின் ஆசீர்வாதத்தோடு 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை படையினருடன் இணைந்து எத்தாவெட்டுனுவெவ ‘எக்சத் பெதுமெல ஸ்ரீ ஹஸ்தி’ விவசாயிகள் சங்க உறுப்பினர்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வாய்க்கால் 206 ஏக்கர் நெற்பயிர்களுக்கு நீர் வழங்குவதுடன், பெரும்போக காலத்தில் 206 விவசாய குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர அவர்களின் பணிப்புரையின்படி 621 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கீர்த்தி பேரகும் அறிவுறுத்தலின் கீழ் எத்தாவெட்டுனுவெவவிலுள்ள 14 (தொ) இலங்கை இலேசாயுத காலட் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஜே. லியனகம அவர்களின் மேற்பார்வையின் கீழ், 18 அக்டோபர் 2021 அன்று இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.