30th October 2021 22:21:03 Hours
மிகைலோவ்ஸ்கயா இராணுவ பீரங்கி கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் பீட்டர் மற்றும் பால் கோட்டையின் மஞ்சள் நிற கதீட்ரல் கோபுரம் மற்றும் நட்சத்திர வடிவ கோட்டைகளின் பிரதிநிதிகளால் அங்கு வருகை தந்த இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இராணுவ தளபதியின் ரஸ்ய விஜயத்தின் ஓர் அங்கமாக வியாழக்கிழமை (28) பேராலய கோட்டைக்குள் உள்ள இந்த அலங்காரமான பீட்டர் மற்றும் பால் கதீட்ரல் பகுதிக்கு சென்றிருந்தனர்.
இதன்போது இலங்கையிலிருந்து வருகை தந்த அதிதிகள், இராணுவ தளபதியின் பாரியார் இராணுவ சேவை வனிதைய பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோருக்கு ரஸ்யாவின் மேற்கு மாவட்டத் தளபதி ஜெனரல் அலெக்சாண்டர் ஜுராவ்லியோவ் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் நுழைவாயிலில் வரவேற்பளித்தனர். அதனை தொடர்ந்து இலங்கை குழுவினர் ஜார் பீட்டர் அவர்களின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட கதீட்ரல் பேராலயத்தின் ஆடம்பரமான மற்றும் வரலாற்று உட்புற அம்சங்களை பார்வையிட்டனர். இப்பகுதி தற்காலத்தில் புனித பீட்டர்ஸ்பேர்க் அருங்காட்சியக வளாகத்தின் ஒரு பகுதியாகவும் இராணுவத் தளமாகவும் அரச பொது மயானத்தை உள்ளடக்கிய பகுதியாகவும் காணப்படுகிறது. அத்தோடு பழங்கால கட்டிடங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டும் மேற்படி வளாகத்தில் இடம்பெற்ற வேலை நிறுத்தத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு என்பன தொடர்பிலும் இலங்கை குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதனையடுத்து மிகவும் கௌரவத்துக்குரியதாக கருதப்படும் பீரங்கியை இயக்குவதற்கான வாய்ப்பு ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது பாரியார் திருமதி சுஜீவா நெல்சன் ஆகியோருக்கு வழங்கப்பட்டதோடு, இந்த வாய்ப்பு அரசியல் வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரமே இதற்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அதனையடுத்து மேற்படி இருவரும் கதீட்ரல், கோட்டை மற்றும் சிறைச்சாலையைச் சுற்றிலும் அழைத்துச் செல்லப்பட்டனர். ரஸ்ய கூட்டமைப்பின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோட்டையின் சுவர்களில் முக்கியத்துவம் மிக்க பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் ரஸ்ய இராணுவ அதிகாரிகளுடனான புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டதோடு, அங்குள்ள விருந்தினர் பதிவேட்டிலும் எண்ணங்களை பதிவிட்டார்.
ரஸ்ய கூட்டமைப்பின் மேற்கு மாவட்ட இராணுவ தலைமையகம் புனித பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ளது. மேலும் இது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மேற்கு இராணுவ அதிகாரிகளின் கழகம் என அழைக்கப்படுகிறது. புனித பீட்டர்ஸ்பேர்க்கின் ஆற்றங்கரை, கடற்கரையிலிருந்து உயர்ந்த, மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக உள்ளது. தேசத்தின் பண்டைய பெருமை மற்றும் வளமான வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் அம்சமாகவும் அமைந்துள்ளது.