Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2021 20:30:00 Hours

இராணுவ தினத்தன்று நன்கொடையாளர்களின் உதவியுடன் 23 வது படை பிரிவினரால் உலர் உணவு பொதிகள் விநியோகம்

இராணுவ தினத்தை முன்னிட்டு 23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த மற்றும் 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டபிள்யூ.ஜே.என்.கே.டி பண்டார ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 ஒக்டோபர் 2021 அன்று தலா 6000 ரூபாய் பெறுமதியுடைய 100 உலர் உணவு பொதிகளை 160 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள உன்னிச்சியா மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் வசிக்கும் வரிய குடும்பங்களுக்காக கொழும்பு மாவட்ட ரொட்டரி கழகத்தைச் சேர்ந்த திரு.சுபெம் டி சில்வா திட்டத்திற்கு அவசியமான நிதி ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, 11 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, 23 ஆவது படைப் பிரிவின் சிவில் விவகார அதிகாரி, 231 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி, 4 கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்கள் மற்றும் 11 வது இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.