26th October 2021 20:25:00 Hours
முதலாவது இலங்கை இராணுவ முன்னோடிப் படையின் சிப்பாய்களால் கடந்த வார இறுதியில் (ஒக்டோபர் 22-23) பாணந்துறை கெசல்வத்த பகுதியில் உள்ள சிறிநந்தன விகாரையின் வருடாந்த ‘கட்டின பூஜை’ விழாவை நடத்துவதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
மத வழிபாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், விகாரையின் மகாநாயக்க தேரர் வண.மெதவுயங்கொட தம்மவிமல தேரரின் வழிகாட்டலின் கீழ் 'கட்டின சீவராய' ஊர்வலமும் இடம்பெற்றது.
அதனையடுத்து பிக்குகளுக்கு 'ஹீல் தான' (காலை உணவு) வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மத போதனைகள் மற்றும் போதி பூஜை நிகழ்வுகளும் இடம்பெற்றன. பின்னர் அனைத்து பிக்குகளுக்கும் 'அடபிரிகர' வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, 612 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎல்எஸ்எஸ் லியனகே, 4 வது கள பொறியியல் சேவை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜீ.ஏ.பந்துல, இலங்கை இராணுவ முன்னோடி படையணி மேஜர் ஐஐஎம்பி உடுக்கும்புற, மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுடன் அரச அதிகாரி மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.