Header

Sri Lanka Army

Defender of the Nation

28th October 2021 19:13:03 Hours

இலங்கை இராணுவ வழங்கல் கல்லூரி தூது குழு பாகிஸ்தான் இராணுவ வழங்கல் கல்லூரி பயிற்றுவிப்பாளர்களை சந்திப்பு

பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையில் நடைமுறையில் காணப்படும் 'இராணுவத்திடமிருந்து இராணுவத்திற்கு' ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் திருகோணமலையில் உள்ள இராணுவ வழங்கல் கல்லூரியில் வழங்கல் பாடநெறி எண் 7 ஐப் தொடரும் 13 பயிற்சி அதிகாரிகளுக்கு குல்தானாவில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் வழங்கல் கல்லூரிக்கு நல்லெண்ண சுற்றுப் பயணத்திற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இராணுவ வழங்கல் கல்லூரி தளபதி உள்ளடங்களான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்குள் திருகோணமலை இராணுவ வழங்கல் கல்லூரியின் பங்களாதேஷ் பயிற்சி அதிகாரிகள் நால்வரும் அடங்கியிருந்தனர்.

பாகிஸ்தானில் சுற்றுபயணத்திலிருந்த காலத்தில், இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் பாகிஸ்தான் இராணுவ வழங்கல் கல்லூரி, நவ்ஷேராவில் உள்ள இராணுவ விநியோக படையின் பாடசாலை, ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் விமானப் படை வழங்கல் தளம், விமானத் படை வேலைத்தளம், இராணுவ சேவைப் படை மையம், அடிப்படை விநியோக தளம், ஆயுத களஞ்சியம், மத்திய இலத்திரனியல் போக்குவரத்து மையம் மற்றும் களஞ்சிய தளம், மின்னியல் மற்றும் இயந்திரவியல் பொறிமுறை தளம் மற்றும் வழங்கல் பிரிவின் முக்கியத்துவம் மிக்க வேலைத் தளங்களின் அதிகாரிகள் மற்றும் பாடநெறியில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடினர்.

பாகிஸ்தானில் இரண்டு வார காலம் தங்கியிருந்த போது, இலங்கைப் பிரதிநிதிகள் பாகிஸ்தான் இராணுவத் சிப்பாய்களால் வழங்கப்பட்ட விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டனர். அத்தோடு மேற்படி சுற்றுப் பயணத்தின் போது, இந்திய-பாகிஸ்தான் எல்லையான அம்ரிஸ்தார் மற்றும் லாகூர், பண்டைய நகரமான தக்ஸிலா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல், காந்தார நாகரீகம் மற்றும் கலைகளின் இடிபாடுகள், பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நினைவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேற்படி சுற்றுப் பயணத்திற்கான (செப்டம்பர் 27 - ஒக்டோபர் 7) இலங்கை குழு திருகோணமலை இராணுவ வழங்கல் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர அவர்களின் தலைமையில் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.