Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2021 20:20:00 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையக படையினர் கிளிநொச்சி நோயாளர்களுக்கு இரத்ததானம்

இராணுவ தினத்தை முன்னிட்டு (ஒக்டோபர் 10) கிளிநொச்சி இராணுவ வைத்தியசாலையில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.

கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் இரத்ததிற்கு நிலவிய தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு 100 இற்கும் மேற்பட்ட சிப்பாய்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமயக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 57 வது படைப்பிரிவு தளபதியவர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.