Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2021 20:15:40 Hours

கந்தகாடு இராணுவ பண்ணையில் அலங்கார மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தின் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடைப் பணிப்பகத்தின் கந்தகாடு இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் பண்ணையில் ‘திலாபியா’ மீன் குஞ்சுகள் மற்றும் அலங்கார மீன்களை வளர்க்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன்படி, 3 வது (தொ) இலங்கை விவசாய மற்றும் கால்நடைப் படையினர் 15,000 விரலி மீன் குஞ்சுகளையும் 10,000 ‘’கோல்டன் காப்’’ அலங்கார மீன்களையும் கந்தகாடு இராணுவ பண்ணையில் உள்ள தொட்டிகளுக்குள் விடுவித்தனர். இத்திட்டம் இலங்கையின் தேசிய மீன்வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆலோசனையுடன் கூட்டாக நிர்வகிக்கப்படுகிறது. இத்திட்டதினூடாக வெளிநாட்டு வருவாயை பெறுவதற்காகவும் ஏற்றுமதி நோக்கங்களுக்காகவும் அலங்கார மீன்களை வளர்க்க இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடைப் பணியகம் எதிர்பார்க்கிறது.

ஆரம்ப நிகழ்வில் 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் டி.எல்.சீ.என் முதுதந்திரி, கந்தகாடு இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் பண்ணையின் பொறுப்பதிகாரி மேஜர் ஆர்.எம் சரத் குமார, திட்டமிடல் அதிகாரி கெப்டன் எ.எ.கே.வை விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.