Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2021 19:38:00 Hours

மத்திய படைகளின் தளபதி தலதா மாளிகை மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு வணக்கம் செலுத்தல்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா கண்டி தலதா மாளிகை மற்றும் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை (24) வணக்கம் செலுத்தினார்.

அதனையடுத்து பல்லேகலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இராணுவ வைத்தியசாலைக்கான விஜயமொன்றை மேற்கொண்ட அவர் அதனை அண்மித்த 11 வது படைப்பிரிவை மேற்பார்வை செய்த பின்னர் மத்திய மாகாண ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

11 வது படைப்பரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே , 111 வது பிரிகேட் தளபதி டூஎம்ஆர்பி ரத்நாயக்க மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் இந்த விஜயத்தின் போது கலந்துக் கொண்டனர்.