Header

Sri Lanka Army

Defender of the Nation

24th October 2021 12:35:33 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் பழுதுபார்க்கப்பட்ட 22 வாகனங்கள் பயன்பாட்டிற்காக இணைப்பு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளரின் அறிவுரைக்கமைய 72 வது இராணுவ தினத்திற்கமைவாக இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமைக்கமைய 7 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் பழுதுபார்க்கப்பட்ட 22 இராணுவ வாகனங்களும் முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட 100 மோட்டார் சைக்கிள்களும் பயன்பாட்டிற்காக இணைக்கப்பட்டன.

அதற்கமைய 7 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையினரால் 4 பஸ்கள், 4 டிரக்டர்கள் வாகனங்கள், 1 லேண்ட கிரஷர் ரக வாகனம், 2 டிரக் ரக வாகனங்கள், 1 லொரி, 2 கெண்டர் ரக லொரிகள், 2 தண்ணீர் பவுசர்கள், 5 பாரம் தாங்கும் ஊர்திகள், ஒரு முச்சக்கரவண்டி என்பன உள்ளடங்களாக படையினரால் பழுதுபார்க்கப்படட 22 வாகனங்கள் மற்றும் 100 மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் (10 ஒக்டோபர் 2021) சாலியபுர கஜபா படையணியின் தலைமைகத்தில் உரிய படைப்பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

மேற்படி வாகனங்கள் இராணுவ தளபதிக்கு பதிலாக கிளிநொச்சி முதலாவது படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்எச்என் ஹேரத் அவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்க்கதாகும்.