25th October 2021 14:00:00 Hours
212 வது பிரிகேட் படையினர், “ஜவயட சவிய” அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் தம்புத்தேககம லுனுவெவயில் குறைந்த வருமானம் பெறும் திருமதி டி.எம்.குமுதுனி திசாநாயக்கவின் குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து திங்கட்கிழமை (18) குடும்பத்தாரிடம் கையளித்தனர்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ஒருங்கிணைப்பில் 21 வது படைப்பிரிவின் தளபதி (GOC) மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 212 வது பிரிகேட் தளபதி, பிரிகேடியர் ஆர்.பி.ஏ.ஆர்.பி. ராஜபக்ஷ அவர்களின் மேற்பார்வையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
7 வது (தொண்) இலங்கை கவசப் வாகன படையினர் தங்கள் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி அந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் " ஜவயட சவிய " அமைப்பால் ஒதுக்கப்பட்ட நிதியுடன் வீட்டை நிர்மானித்தனர். 7 வது (தொண் இலங்கை கவச வாகன படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எல்.ஆர் அமரசேகர திட்டத்தின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்தார்.
வீடு திறப்பு நிகழ்வில் 21 வது படைப்பிரிவு தளபதி சார்பாக 211 பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்சீஎஸ்ஆர். சேனாரத்ன பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உத்திக பிரேமரத்ன அவர்களுடன் கலந்துகொண்டனர்.
மேலும் 7 (தொ) இலங்கை கவசப் வாகன படையின் கட்டளை அதிகாரி, 212 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் கொவிட் – 19 சுகாதார கட்டுபாடுகளுக்கமைவாக மட்டுப்படுத்தப்பட்ட அழைப்பார்களும் கலந்துகொண்டனர்.