Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2021 14:15:00 Hours

பாதுகாப்பு கல்லூரியின் பயிற்சி அதிகாரிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

இந்திய பாதுகாப்பு கல்லூரியின் மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான 20 அதிகாரிகளும் அவர்களில் 14 அதிகாரிகளது மனைவியரும் அடங்கிய தூதுக்குழுவினர் புதன்கிழமை (20) யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஈரான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கிய தூதுக்குழுவிற்கு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி மற்றும் பிரிகேடியர் வழங்கல் மற்றும் நிர்வாகம் ஆகியோரால் வரவேற்ப்பளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களால் மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை தலைமையிலான இந்திய தூதுக்குழுவிற்கு வரவேற்பளிக்கப்பட்டதோடு, தூதுக்குழுவினரால் இந்திய அமைதிகாக்கும் படைவீரர்களின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது இந்திய அமைதிகாக்கும் படைவீரர்களின் நினைவு துபிக்கு மலர் வலயம் சூட்டி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், தூதுக்குழுவினர் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்குச் சென்றனர், அங்கு அவர்களுக்கு ‘‘யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் தற்போதைய பணி மற்றும் கடமைகள்’’ குறித்து விளக்கப்பட்டது. மேலும், இந்த கலந்துரையாடல் அமர்வின் போது, சமூகம் தொடர்பான திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது மற்றும் இன நல்லிணக்க கருத்துக்களை மேம்படுத்தும் முயற்சிகள், போருக்குப் பின்னர் இராணுவத்தின் பொறுப்புக்கள் மற்றும் வகிபங்கு பற்றிய பொதுவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

படையினரால் வழங்கப்பட்ட நேர்த்தியான கலாசார நிகழ்வைத் தொடர்ந்து கலந்துரையாடல் அமர்வு இடம்பெற்றது. கலந்துரையடலை தொடர்ந்து தூதுக்குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஹரி பி பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் கையெழுத்திட்டார். மேலும், வழக்கமான சம்பிரதாயங்களுக்கு அமைய பாராட்டுச் சின்னங்களாக நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வின் இறுதியாக, படைத் தலைமையகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் தூதுக்குழுவினர் பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.