25th October 2021 14:45:00 Hours
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரியாக புதிதாக பதவி உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார வியாழக்கிழமை (21) சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க அம்பேபுஸ்ஸவிலுள்ள இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் எளிமையான விழாவிக் ஊடாக கௌரவிக்கப்பட்டார்.
புதிதாக பதவி உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரியை படைத் தளபதி சார்பாக இலங்கை சிங்க படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் எம்.ஜி.டபிள்யூ விமலசேன, அவர்கள் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்புடன் வரவேற்றார்.
இலங்கை சிங்க படையணியின் வீரமரணம் அடைந்த சிங்க படையணியின் போர் வீரர்களுக்கு நினைவு தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர். அணிவகுப்பு மைதானத்தில் அன்றைய பிரதம விருந்தினருக்கு காவலர் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர் படையணி வளாகத்தில் பிரதம விருந்தினராரல் மரக்கன்று நடப்பட்டது.
இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் 11 வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே , இலங்கை சிங்க படையணியின் அதிகாரிகள் மற்றும் படையினர் இவ் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.