Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2021 15:30:00 Hours

5 வது (தொண்) இலங்கை பீரங்கிப் படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் வறிய குடும்ப பிள்ளைகளுக்கு நிவாரணபொருட்கள் வழங்கல்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது படைபிரிவின் கீழ் உள்ள 222 வது பிரிகேட்டின் 5 வது (தொண்) இலங்கை பீரங்கிப் படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து கந்தளாய் சீனிபுரவில் பல பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் பொருளாதாரக் கஷ்டங்களைக் கருத்தில் கொண்டு உலர் உணவுப் பொருட்களை வழங்கியதுடன் குடும்பத்தின் மூன்று குழந்தைகளுக்கும் நிதி உதவி வழங்க ஏற்பாடும் செய்தனர்.

வெள்ளிக்கிழமை 15 ம் திகதி இராணுவத்தின் பிரதிநிதிகள் குழு குடும்பத்திற்கு அரிசி, பருப்பு, கறுவாடு, மசாலாப் பொருட்கள், தானியங்கள், பால் மா பாக்கெட்டுகள் போன்ற உலர் உணவுப் பொருட்களையும், அவர்களின் வறிய நிலையை அவதானித்த பின்னர் பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஆடைகளையும் அன்பளிப்பாக வழங்கியது. இப்பகுதியில் சேவையாற்றும் 5 வது (தொண்) இலங்கை பீரங்கிப் படையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.

பாடசாலை உபகரணங்கள் மற்றும், வறிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூன்று குழந்தைகளுக்கும் அவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சைகள் முடிக்கும் வரை மாதாந்தம் ரூபாய் 7500.00 (ஒவ்வொரு குழந்தைக்கும் ரூபாய் 2500.00) வழங்கப்பட தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 222 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் நதீகா குலசேகர அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

222 வது பிரிகேட் தளபதி, 5 வது இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி, சிவில் விவகார அதிகாரி, 222 வது பிரிகேட், அதிகாரிகள் மற்றும் , 5 வது இலங்கை பீரங்கி படையின் சிப்பாய்களும் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.