26th October 2021 08:56:36 Hours
இராணுவத் தலைமையகத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் கீழ் உள்ள 111 பிரிகேடின் முதலாவது இலங்கை ரயிபள் படையணி நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையுடன் மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் வறிய குடும்பத்திற்கு புதிய வீடொன்று நிர்மாணித்தது கொடுக்கப்பட்டது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, எளிய நிகழ்வொன்றின் போது, மாத்தளை பிரதேசத்தின் திரு எஸ்.பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.
இராணுவத்தினரின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்துடன் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா மற்றும் 11 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆகியோரின் ஆசிர்வாதத்தோடு, மேற்படி புதிய வீடு சில வாரங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டது.
இந்து சமய மரபுகளுக்கு அமைவாக நடைப்பெற்ற நிகழ்வில் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே , 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க, 111 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி கேணல் ஆர்எம்எச் ஜயதிஸ்ஸ, முதலாவது ரைப்பிள் படையணி கட்டளை அதிகாரி, அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.