25th October 2021 14:30:00 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது பிரிகேடின் கீழுள்ள 3 வது (தொ) இலங்கை சிங்க படையினர் சனிக்கிழமை (23) நுவரெலியா - ஹவாஎலிய மஹிந்த வீதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு உதவிகளை வழங்கியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான வாகனப் போக்குவரத்து , மற்றும் அவர்களின் உடைமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு படையினரால் உதவிகள் வழங்கப்பட்டன.
3 வது (தொ) இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பல அதிகாரிகளால் படையினர் மேற்பார்வை செய்யப்பட்டனர்.