Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2021 12:00:00 Hours

198 பேர் பயிற்சியின் பின் தேசத்தின் சேவைக்கு பயிற்சி பாடசாலையிலிருந்து புறப்பாடு

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை 13 ம் திகதி சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெற்ற எளிமையான நிகழ்வில் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 198 புதிய ஆட்சேர்ப்பு மாணவர்கள் பயிற்சி முடிவின் பின்னர் வெளியேறினர்.

இவர்கள் 26 பேர் கெமுனு ஹேவா படையணிக்காகவும் 80 பேர் சிறப்பு படையணிக்காகவும் 92 பேர் இராணுவ புலனாய்வுப் படையணிக்காகவும் மின்னேரியா காலாட் படை பயிற்சி நிலையத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக பயிற்சி பெற்றனர்.

கெமுனு ஹேவா படையணியின் கே.எச்.டி.எல் மதுஷங்க பாடநெறியின் சிறந்த மாணவனாக தெரிவு செய்யப்பட்டு விடுகை அணிவகுப்பின் போது விருது வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் சந்தன ரணவீர, கலந்து கொண்டார். இராணுவத் தளபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னோக்கி மூலோபாயத் திட்டம் - 2020 - 2025' க்கு இணையாக இந்த ஆட்சேர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.