Header

Sri Lanka Army

Defender of the Nation

24th October 2021 22:35:33 Hours

இலங்கை இராணுவத் தளபதி ரஷ்யாவில் வரவேற்கப்பட்டார்

ரஷ்ய தரைப்படைகளின் இராணுவ தலைமைத் தளபதி , இராணுவ ஜெனரல் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒலெக் சல்யுகோவ் ஆகியோரின் அழைப்பினை ஏற்று நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மொஸ்கோவை இன்று சென்றடைந்தார்.

இலங்கை இராணுவத் தளபதி மாஸ்கோவிற்கு வருகை தந்தபோது இலங்கை மற்றும் ரஷ்ய இராணுவம் இடையே நிலவும் இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை தனித்துவமாக வெளிப்படுத்தி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், அமைச்சு ஆலோசகர்கள் மற்றும் சிரேஷ்ட ரஷ்ய இராணுவ அதிகாரிகள் சனிக்கிழமை (23) அன்புடன் வரவேற்றனர்.

ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவில் 'தெரியா சிப்பாய்' நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ரஷ்ய தரைப்படைகளின் தலைமை தளபதி, இராணுவ ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது அவர் மாஸ்கோ கிரெம்ளினின் ஆயுத அருங்காட்சியகம், மாஸ்கோ உயர் ஒருங்கிணைந்த ஆயுதக் கட்டளைப் பள்ளியினை அதன் தளபதி மேஜர் ஜெனரல் ரோமன் பின்யுகோவ்வுடன் பார்வையிடுவார்.

அத்தோடு நரோ போமின்ஸ் இல உள்ள 4 வது பாதுகாப்பபு படைப்பிரிவு தளபதி மற்றும் மிகைலோவ்ஸ்காயா இராணுவ பீரங்கி கல்லூரி தளபதி ஆகியோரை சந்திப்பார். அதனை தொடர்ந்து இராணுவ மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களையும் பார்வையிடுவார்.